Followers

Sunday 3 August 2014

தினம் தினம் தொலையாதா…?!







ரோஜா இதழ் பொக்கைவாய்
சிரிக்க சிரிக்க…!!
அன்பில் தேன் பெருகி
வடிந்ததுவே…!!!
கண்கள் அசையாது
அரை மாத்திரையில்
அகத்தில் ஆயிரம் வாட்ஸ்…!!!

கொள்ளை அழகில் - என்மனம்
கொள்ளை போனதுவே
பிடித்திருக்கிறது
இத்திருட்டு

தினம் தினம் தொலையாதா…?!


12 comments:

  1. குழந்தை திருடர்கள்.
    சகோதரி எனது பதிவு ''சுட்டபழம்''

    ReplyDelete
    Replies
    1. இன்பமான திருட்டு அல்லவா.
      இதோ வந்துவிட்டேன். சகோதரரே. மன்னிக்கவும்.

      Delete
  2. அருமையான கவிதை சகோதரி!

    ReplyDelete
  3. கொள்ளைச் சிரிப்பில் நம் மனதைக்
    கொள்ளையடிக்கும் குழந்தை
    கொள்ளைக்காரன் தான்
    கொள்ளை கொள்ளும் நொடிகள்
    கொள்ளை போனாலும்
    கொள்ளை இனிய கொள்ளைதான்!

    ReplyDelete
    Replies
    1. கொள்ளை,கொள்ளை..ஆகா அசத்திவிட்டீர்கள் ஐயா. எல்லாம் தங்களுக்கு கை வந்த கலையாக இருக்கிறது. நன்றி.

      Delete
    2. எனக்கென்னவோ.... ஒரே வார்த்தையை அழுத்தமாய் சொன்னது சந்தேகமாக இருக்கிறது நண்பரே...

      Delete
    3. அடடா...இப்படி புரிந்து கொண்டீர்களே...தவறு ஐயா..தவறு. கொள்ளை என்று ஆறு வரிகளிலும் தொடக்கம் அருமை என்பதைக் குறிக்கவே அப்படி கருத்திட்டேன் சகோதரரே.

      Delete
  4. “இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
    ஏடுகள் சொல்வ துண்டோ ?
    அன்பு தருவதிலே - உனைநேர்
    ஆகுமோர் தெய்வ முண்டோ ? “ - பாரதி
    இதற்கு மேல் என்ன கருத்திட நண்பரே?
    நன்றி!

    ReplyDelete
  5. வணக்கம்
    குழந்தைச் சிரிப்பு இதையத்தை நெரும் என்பது போல.
    கவிதையும் என்உள்ளத்தை நெருடிவிட்டது. சொல்வதற்கு வார்த்தை ஏது நன்றாக உள்ளது.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. இந்த கவிதையில் நான் களவு போய்விட்டேன்.
    கொள்ளை கொள்ளும் வரிகள். அருமை சகோதரி.

    ReplyDelete