Followers

Friday 25 July 2014

வெண்புறாவே சொல்லடி







வெண்புறாவே  சொல்லடி
வெட்கம்  விட்டு  கேட்கின்றேன்

கடிதச்சுருள்  காணவில்லை
காலைக்  கண்டு  வருந்துகின்றேன்

பறந்து  வந்து  நிற்கின்றாயே
பார்த்து  வரச்  சொன்னானா...?

பசலை  படர்ந்த  என்முகம்
பார்த்த  நினைவில்லையோ...?  உனக்கு

ஒட்டிய  கண்ணமதில்
ஒய்யாரம்  இல்லையடி

ஓயாமல்  புலம்பியதால்
தோழிகள்  உடன்  இல்லையடி

விளையாட்டாய்   ஓரக்கண்நோக்கல்
வினையாகிப்  போனதெனக்கு

பொருள்  சேர்க்கப்  போனானடி - நான்
பொருள்  இல்லாமல்  போனேனடி

வெண்புறாவே  - எங்கே...?
பறந்து  செல்கின்றாய்

பாவை  வருத்தம் பகிர
பறந்து  செல்கின்றாயா  அவனிடம்...?


10 comments:

  1. வெண்புறா கவிதையின் வெண்பாக்கள் அருமை சகோதரி.

    ReplyDelete
  2. முதல் கருத்துரைக்கு நன்றி சகோதரரே..

    ReplyDelete
  3. அருமை... தேவையான பொருட்கள் போதும் என்று சொல்வதற்கு செல்கிறது....

    ReplyDelete
  4. நன்றி. தனபாலன் சார்.

    ReplyDelete
  5. வணக்கம்
    அழகிய வெண்பாக்கள் கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் அவர்களே.

      Delete
  6. ஆஹா என்ன ஒரு காதல் கவிதை மிகவும் ரசித்தோம் சகோதரி! முதலில் எங்களை மன்னிக்கவும்! நாங்கள் தாங்கள் ஆண் என்று நினைத்துவிட்டோம்! எங்களில் ஒருவர் பெயர் துளசிதரன் துளசி என்றுதான் அழைப்பது வழக்கம் ஆகவே இந்தக் குழப்பம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரரே.

      பரவாயில்லை.பெயர் குழப்பம் இருப்பது தெரிந்தது ஆகையால் கருத்து இடும்போது துளசி சகோதரி என சிலர் தளங்களில் இட்டேன்.

      நன்றி.

      Delete
  7. வெண்புறாவைக் கொண்டு அருமையான ஒரு காதல் கவிதை.

    "//விளையாட்டாய் ஓரக்கண்நோக்கல்
    வினையாகிப் போனதெனக்கு//" -
    அருமை. அருமை.

    ReplyDelete
  8. நன்றி சொக்கன் அவர்களே.

    ReplyDelete