Followers

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Tuesday, 2 September 2014

சிற்பி நீயே...!




                                                       கல்லாய் வடிவெடுத்தேன்
                                                       கடைவார் எம்மையென்று
                                                       காட்டு அவர்களுக்கு
                                                       கடைய தேர்வுக் கல்லிதென்று

Sunday, 31 August 2014

மனதில் சோகம் ஏன் வந்தது...?







கார்மேக சபை கூடியது வாரீர் வாரீர்...!!!
ஆரவார ஒலி பெருக்கி அறிவிக்கிறது பாரீர்...!!!

அமிர்தமாய் சாரல் வீசுகிறது
அன்னமிடும் பூமியின் வாசம் மூக்கில் நுழைகிறது 

Thursday, 14 August 2014

எப்படி...?





கருவாடு நாற்றம் என்று
கருத்து சொன்னால் எப்படி...?

இடியாப்பம் சிக்கல் என்று
பார்த்து சொன்னால் எப்படி...?

Wednesday, 6 August 2014

இடைவெளி





பருவம் மாறும் போது
புரிதலும் மாறுகிறது

தலைமுறை இடைவெளி
தொடர்முறை  இடைவெளியாய்

Sunday, 3 August 2014

தினம் தினம் தொலையாதா…?!







ரோஜா இதழ் பொக்கைவாய்
சிரிக்க சிரிக்க…!!
அன்பில் தேன் பெருகி
வடிந்ததுவே…!!!
கண்கள் அசையாது
அரை மாத்திரையில்
அகத்தில் ஆயிரம் வாட்ஸ்…!!!

Wednesday, 30 July 2014

அம்மா...அம்மா...தான்

துளசிதரன் அவர்கள் தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி - என்ற தலைப்பில் ஒரு நாள் முன்னர் பதிவு எழுதி இருந்தார்கள். அப்பதிவைப் படித்து விட்டு கீழ்கண்டவாறு கருத்திட்டு வந்தேன்.

Friday, 25 July 2014

வெண்புறாவே சொல்லடி







வெண்புறாவே  சொல்லடி
வெட்கம்  விட்டு  கேட்கின்றேன்

கடிதச்சுருள்  காணவில்லை
காலைக்  கண்டு  வருந்துகின்றேன்

Wednesday, 23 July 2014

ஆசிகளோடு கைகோர்ப்போம்




சொல்லி  சொல்லி வைத்தாலும்
சொக்கி  வந்து  நிற்பதென்ன
சுள்ளி  எடுத்து  இருக்ககட்டி
சுடுவெயிலில்  தலைக்  கேற்றி
எட்டிநடக்  கையிலே  மச்சான்
எட்டி  எட்டி  பார்ப்பதென்ன
எவராவது  நோக்கிடின்  ஐய்யோ
என்னிலை  யாவ  தென்ன

இதம்,இதம்,இதம்

இதமனப்பூ  வின்நறு  நாற்றமதை
     இதமாய்பகிர  வெனவலைப்  பூமுதலடி  
இதம்தேடி  வருவோர்க்  கூட்டத்திரள்
     இதமாகிமனம்  மகிழ்நிறை  பறந்திடவே
இதம்தேடி  வந்திளைப்  பாரவேஞான்
     இதமாய்  சிறுமுயற்சி   விழைகிறேன்
இதத்தின்  வருடலில்  சுகமாய்நல்
     இதம்  செழித்துவளர  வாழ்த்துவீர்.