Followers

Wednesday 30 July 2014

அம்மா...அம்மா...தான்

துளசிதரன் அவர்கள் தென்னகத்தின் முதல் டெஸ்ட் ட்யூப் பேபி - என்ற தலைப்பில் ஒரு நாள் முன்னர் பதிவு எழுதி இருந்தார்கள். அப்பதிவைப் படித்து விட்டு கீழ்கண்டவாறு கருத்திட்டு வந்தேன்.

அம்மாவென அழக்க
உயிர் உருகும்
அம்மா...வென அலற 
உயிர் துடிக்கும்...
அம்மா...அம்மா...தான்.

ஆனாலும் என் மனதில் அப்பதிவின் தாக்கமாக புதுக்கவிதை ஒன்று வந்தது. அதை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
துளசிதரன் அவர்களின் லிங்க் இதோ சென்று பாருங்கள்.






அம்மாவென அழைக்க
உயிர்  உருகும்
அம்மா...வென அலற
உயிர் துடிக்கும்

காததூரம் இருந்தாலும்
கவனமொன்று இருக்கும்
கண்ணே மணியேயென
வளர்ந்தாலும் உள்ளம் கொஞ்சும்

கனவினில் சுகம் அறிவால்
கலங்கினால் கனவில் விழிப்பால்
கடவுளே உடன் செல்லென
கட்டளை இடுவாள்
கண்கள் நீர்வடிய கலங்கி நிற்பாள்

சந்தோஷ அலையில்
சொக்கிப் போவாள்
நன்றாய் இரு என ஆசிர்வதிப்பாள்

நேரில் அதிகம் பேசாவிடினும்
நேசத்தில் பேசிடுவாள்
அம்மா...அம்மா...தான்.  


11 comments:

  1. இவ்உலகில் தாயைவிட ஒரு பொக்கிஷம் வேறில்லை சகோதரி கவிதை அருமை வாழ்த்துக்கள்.

    துளசிதரன் ஐயா அவர்களின் பதிவை நான் ஏற்கனவே படித்து விட்டேன் தாமதமானால் கருத்துரையிலேயே பிரம்பால் அடிக்கும் பிரம்மன் அவர்.

    ReplyDelete
    Replies
    1. "இவ்உலகில் தாயைவிட ஒரு பொக்கிஷம் வேறில்லை" உண்மை தான்.
      சரி சரி...
      நன்றி சகோதரரே.

      Delete
    2. கில்லர்ஜி! இப்படியெல்லாம் கூட எங்களைப் பற்றி என்னென்ன்னவோ சொல்லுகின்றீர்களே! ஹாஹாஹா....

      Delete
    3. பின்னே கடவுளுக்கே FLASH BACK போட்டவராச்சே தாங்கள்.

      Delete
    4. ஹாஹா ஐயோ சாமி ஜி! அதுஅந்தப் பையனின் உண்மைச் சம்பவம்,,,,ஃப்ளாஷ் பாக்
      ...

      Delete
  2. அம்மா அவனியின் அன்பளிப்பு! வேறிலை
    இம்மா நிலத்தில் இணை !

    மனந்தொட்ட கவிவரிகள் சகோதரி!
    மிக அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சகோதரி.

      Delete
  3. "//நேரில் அதிகம் பேசாவிடினும்
    நேசத்தில் பேசிடுவாள்//"

    - என்ன ஒரு உணர்வுப்பூர்வமான வரிகள்.

    ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன் சகோதரி. வாழ்த்துக்கள்.

    தங்களுக்கு நேரம் இருப்பின் இந்த "தாய்மை" கதையை படித்துப்பாருங்கள் - http://unmaiyanavan.blogspot.com.au/2012/10/1.html

    ReplyDelete
  4. நிச்சயமாக படித்து பார்க்கிறேன்.
    கருத்திற்கு நன்றி சகோதரரே.

    ReplyDelete
  5. நேரில் அதிகம் பேசாவிடினும்
    நேசத்தில் பேசிடுவாள்//

    அருமையான வரிகள் சகோதரி! மனதைத் தொட்ட வரிகள்!

    எங்கள் பதிவைச் சொல்லியதற்கு மிக்க நன்றி சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete