சொல்லி  சொல்லி வைத்தாலும்
சொக்கி  வந்து  நிற்பதென்ன
சுள்ளி  எடுத்து  இருக்ககட்டி
சுடுவெயிலில்  தலைக்  கேற்றி
எட்டிநடக்  கையிலே  மச்சான்
எட்டி  எட்டி  பார்ப்பதென்ன
எவராவது  நோக்கிடின்  ஐய்யோ
என்னிலை  யாவ  தென்ன
பெண்களோடு  போகயிலே  உங்கள்
பொன்வண்டு  கண்கள்  துளைப்பதென்ன
பொங்கியாசை  வந்தாலு  மெனக்கு
பெத்தவங்க  அங்கே  காத்திருக்க
பொங்க  வேண்டும்  ராத்திரிக்கு
பொழுது  சாயுமுன்னே  மச்சான்
பொன்னூரு  பேக  வேணும்
பொடி  நடையா  போய்டுவாரேன்
ஆனி  ஆடி  முடியட்டும்
ஆவணி  காலெடுத்து  வைக்கட்டும்
ஆத்தா  அப்பாவோடு  நீரும்
அண்ணன்  தங்கை  யுடன்வர
அண்டைவீட்டார்  மக்கள்  திரண்டே
அன்புடன்  பெரும்  பட்டாளமாய்
ஆசையோடு  வந்து  பரிசம்போட்டு
ஆசிகளோடு  கைகோர்ப்போம்  மச்சான். 

 
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteமெய்எழுத்தில் அடியெடுத்து உயிர்எழுத்தில் அடியெடுத்து கவி புனைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன் தொடர்ந்து எழுதுங்கள் வானம் ஒருநாள் உங்கள் வசமாகும் அப்போது வீசும் ஆனந்த காற்று..
தங்களின் பக்கம் வருவது முதல் முறை இனி என்வருகைதொடரும்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
Deleteமுதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்
நன்றி சகோதரரே.
ஏக்கப்பெருமூச்சின் உஸ்னத்தை அழகாக வெளியேற்றியது அருமை நண்பரே...
ReplyDeleteவணக்கம்
Deleteமுதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்
நன்றி சகோதரரே.
கைகோர்த்து விட்டேன் தோழரே... இனி உங்கள் தளத்தை தொடர்கிறேன்...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
வணக்கம்
Deleteமுதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்
நன்றி சகோதரரே.
அட, அழகான ஒரு காதல் கவிதையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.
ReplyDeleteஇந்த கவிதையை படிக்கும்போது காட்சிகள் கற்பனையாக கண்முன்னே வந்து சென்றது.
அந்த கடைசி பத்தி அருமை.
வாழ்த்துக்கள்.
வணக்கம்
Deleteமுதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்
நன்றி சகோதரரே.
வணக்கம் சகோதரி!
ReplyDeleteவலையுலகப் புதிய வரவாகக் காண்கிறேன் உங்களை!..
மகிழ்ச்சி!
இதமான எண்ணம் இயக்கும் எதையும்!
நிதமும் தருமே நிறைவு!
அழகான கவிதை! தொடருங்கள் மேலும்!
இனிதான நல் வாழ்த்துக்கள்!
வணக்கம்
ReplyDeleteமுதல் வருகைக்கும்,
முத்தான கருத்திற்கும்
நன்றி சகோதரி.
ReplyDeleteவணக்கம்!
பட்டுப் பறப்பதுபோல் உன்பாட்டில் பைந்தமிழ்
மெட்டுப் பறக்கும் மிளிர்ந்து!
துளசி கவிகண்டேன்! துாய மலராய்
மலா்ச்சி கண்டேன் மனத்து
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்
ReplyDeleteநன்றி ஐயா..
என்ன ஒரு கவிதை!
ReplyDeleteஆசையோடு கைகோர்த்துவிடுவாள் பாடிய பெண் தன் மச்சானுடன்!
நன்றி ஐயா.
ReplyDelete