Followers

Wednesday 23 July 2014

ஆசிகளோடு கைகோர்ப்போம்




சொல்லி  சொல்லி வைத்தாலும்
சொக்கி  வந்து  நிற்பதென்ன
சுள்ளி  எடுத்து  இருக்ககட்டி
சுடுவெயிலில்  தலைக்  கேற்றி
எட்டிநடக்  கையிலே  மச்சான்
எட்டி  எட்டி  பார்ப்பதென்ன
எவராவது  நோக்கிடின்  ஐய்யோ
என்னிலை  யாவ  தென்ன

பெண்களோடு  போகயிலே  உங்கள்
பொன்வண்டு  கண்கள்  துளைப்பதென்ன
பொங்கியாசை  வந்தாலு  மெனக்கு
பெத்தவங்க  அங்கே  காத்திருக்க
பொங்க  வேண்டும்  ராத்திரிக்கு
பொழுது  சாயுமுன்னே  மச்சான்
பொன்னூரு  பேக  வேணும்
பொடி  நடையா  போய்டுவாரேன்


ஆனி  ஆடி  முடியட்டும்
ஆவணி  காலெடுத்து  வைக்கட்டும்
ஆத்தா  அப்பாவோடு  நீரும்
அண்ணன்  தங்கை  யுடன்வர
அண்டைவீட்டார்  மக்கள்  திரண்டே
அன்புடன்  பெரும்  பட்டாளமாய்
ஆசையோடு  வந்து  பரிசம்போட்டு
ஆசிகளோடு  கைகோர்ப்போம்  மச்சான். 


15 comments:

  1. வணக்கம்
    மெய்எழுத்தில் அடியெடுத்து உயிர்எழுத்தில் அடியெடுத்து கவி புனைந்த விதம் கண்டு மகிழ்ந்தேன் தொடர்ந்து எழுதுங்கள் வானம் ஒருநாள் உங்கள் வசமாகும் அப்போது வீசும் ஆனந்த காற்று..
    தங்களின் பக்கம் வருவது முதல் முறை இனி என்வருகைதொடரும்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      முதல் வருகைக்கும்,
      முத்தான கருத்திற்கும்
      நன்றி சகோதரரே.

      Delete
  2. ஏக்கப்பெருமூச்சின் உஸ்னத்தை அழகாக வெளியேற்றியது அருமை நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      முதல் வருகைக்கும்,
      முத்தான கருத்திற்கும்
      நன்றி சகோதரரே.

      Delete
  3. கைகோர்த்து விட்டேன் தோழரே... இனி உங்கள் தளத்தை தொடர்கிறேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      முதல் வருகைக்கும்,
      முத்தான கருத்திற்கும்
      நன்றி சகோதரரே.

      Delete
  4. அட, அழகான ஒரு காதல் கவிதையை படம் பிடித்து காட்டியுள்ளீர்கள்.
    இந்த கவிதையை படிக்கும்போது காட்சிகள் கற்பனையாக கண்முன்னே வந்து சென்றது.

    அந்த கடைசி பத்தி அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்
      முதல் வருகைக்கும்,
      முத்தான கருத்திற்கும்
      நன்றி சகோதரரே.

      Delete
  5. வணக்கம் சகோதரி!

    வலையுலகப் புதிய வரவாகக் காண்கிறேன் உங்களை!..
    மகிழ்ச்சி!

    இதமான எண்ணம் இயக்கும் எதையும்!
    நிதமும் தருமே நிறைவு!

    அழகான கவிதை! தொடருங்கள் மேலும்!
    இனிதான நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வணக்கம்
    முதல் வருகைக்கும்,
    முத்தான கருத்திற்கும்
    நன்றி சகோதரி.

    ReplyDelete

  7. வணக்கம்!

    பட்டுப் பறப்பதுபோல் உன்பாட்டில் பைந்தமிழ்
    மெட்டுப் பறக்கும் மிளிர்ந்து!

    துளசி கவிகண்டேன்! துாய மலராய்
    மலா்ச்சி கண்டேன் மனத்து

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  8. வணக்கம்

    நன்றி ஐயா..

    ReplyDelete
  9. என்ன ஒரு கவிதை!

    ஆசையோடு கைகோர்த்துவிடுவாள் பாடிய பெண் தன் மச்சானுடன்!

    ReplyDelete
  10. நன்றி ஐயா.

    ReplyDelete