Followers

Tuesday 2 September 2014

சிற்பி நீயே...!




                                                       கல்லாய் வடிவெடுத்தேன்
                                                       கடைவார் எம்மையென்று
                                                       காட்டு அவர்களுக்கு
                                                       கடைய தேர்வுக் கல்லிதென்று

                                                       பிறத்தல் விதித்தாய்
                                                       பிறவாதிருக்க கடைந்தாய்
                                                       அகலாது வேண்டி நிற்க
                                                       அதற்குள் வந்தமர்ந்தாய்

                                                       உடன் வாசம் வரம்தந்தாய்
                                                       உன்வாசம் பேறு தந்தாய்
                                                       உகத்தலில் நீ...!!!
                                                       உவப்பில் நான்...!!!

14 comments:

  1. சொல்லாய் கடைந்தெடுத்து காட்டிய கவி....
    பிறத்தல் விதியென பிறந்த கவி...
    உடன் வந்த வாசம் பிடித்த கவி...
    ஆம், உவப்பில் நானே....

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர்ஜி அவர்களே

      Delete
  2. வணக்கம்

    விண் மேகப் படமெடுத்து.
    வீரியமாய் சொல் விதைத்தாய்
    செப்பிய வரிகண்டு
    என் சிந்தை குளிர்ந்தது.

    நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் அவர்களே

      Delete
  3. சகோதரி ஒரு சிறிய சந்தேகம்.
    "//உகத்தல் நீ//" - இதற்கு எனக்கு சரியான அர்த்தம் விளங்கவில்லை.விளக்கமளித்தால் முழு கவிதையையும் புரிந்து ரசிப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. உகத்தல் நீ..... இறைவனாகப் பட்டவன் மகிழ்கிறான்

      உகத்தலில் நீ...என எழுதி இருக்கலாம் என நினைக்கிறேன். மாற்றி விடுகிறேன்.

      நன்றி சொக்கன் அவர்களே.

      Delete
  4. ஓ! நீங்கள் மாற்றிய பிறகு நாங்கள் தாமதமாக வருகின்றோமோ?!! சொக்கன் சாரின் பின்னூட்டம் கண்டு சிறிது குழப்பம் பின்னர்தான் புரிந்தது....

    அண்டசராசரம் முழுதும் அவன் ஆட்சிதானே! கடைந்தால் தானே நாம் அவனைப் புரிந்துகொள முடியும்.....அருமை சகொதரி!

    ReplyDelete
  5. ‘’அன்பு நண்பியே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.
    அன்புடன்
    கில்லர்ஜி.

    ReplyDelete
  6. நன்றி சகோதரரே.

    ReplyDelete
  7. இன்றைய வலைச்சர அறிமுகத்திற்க்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete