Followers

Sunday 31 August 2014

மனதில் சோகம் ஏன் வந்தது...?







கார்மேக சபை கூடியது வாரீர் வாரீர்...!!!
ஆரவார ஒலி பெருக்கி அறிவிக்கிறது பாரீர்...!!!

அமிர்தமாய் சாரல் வீசுகிறது
அன்னமிடும் பூமியின் வாசம் மூக்கில் நுழைகிறது 


இடிராஜன் மிருதங்கம் வாசிக்க
மின்னல் மங்கை நர்த்தனம் புரிகின்றாள்

அமிர்தம் பொழியத் தொடங்கியது
ஓசை காற்றை மீட்டியது




பொங்கும் அன்ன நுரைபோலே
பூத்திருந்தது வானம் இங்கே

குளிர்வாயோன் கன்னத்தில் முத்தமிட
மேனி சிலிர்த்தது மெல்ல ஆடியது

ஐம்புலன்களும் அடங்க
மெளன மோகம் இயற்கையுடன்

மனதில் சோகம் ஏன் வந்தது...?
மழைக்காலத்தில் தானாக வருகிறதே...ஏன்...?

என் கண்ணில் நீர் வழிந்தால்  - சோகம், ஆனந்தம் 
உன் கண்ணில் நீர் பொழிந்தாலும் ஆனந்தம், சோகம்

மனம் மாறியது சுடசுட பஜ்ஜிக்கும்
மசாலா தேநீர்க்கும்...!!!

காலம் மாற்றும் வெகு விரைவாக
மனமும்  மாறும் அப்படித்தான்.

    

8 comments:

  1. மழையில் நனைய வைத்து ஜலதோசம் பிடிக்காமலிருக்க... மசாலா தேநீரும் தந்தவிதம் அருமை.

    ReplyDelete
  2. மழைக் காலம் மாறுபட்ட உணர்வலைகளின் நேரம்!..
    உண்மைதான்! நல்ல கற்பனை!
    அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அழகின் சிரிப்பு அருமை!
    மழையின் துளி விழும் ஓசை நயத்துடன்
    கவிதை மொழிகளைப் படித்துப் பார்க்கிறேன்.
    உருவகங்களைச் சிறப்பாகக் கையாளுகிறீர்கள்!
    வளர வாழ்த்துகள் நண்பரே!
    பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  4. இயற்கை தரும் ஷவரில் ஜில்லென குளிக்க வைத்து ஷவர் பாத் கொடுத்து விட்டீர்கள்! மனம் ஆனந்த ராகம் மீட்டியது...வான் மேகம் பூப்பூவாய் தூறும்.....

    ReplyDelete
  5. "//மனம் மாறியது சுடசுட பஜ்ஜிக்கும்
    மசாலா தேநீர்க்கும்...!!!//"

    - ஆனால் எங்களுக்கு மசாலா தேநீர் வேண்டுமானாலும் கிடைக்கும் ஆனால் எனக்கு பிடித்த மிளகாய் பஜ்ஜி மட்டும் இங்கு வழியில்லை.

    இந்த கவிதையை படித்தவுடன், எனக்கு சென்ற வாரம் முழுவதும், இங்கு ஆடை மழை பெய்தது தான் நியாபகத்துக்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. அடை மழை பெய்தது நினைவிற்கு வந்தது போல் மிளகாய் பஜ்ஜி இந்தியாவில் சாப்பிட்டது நினைவிற்கு வரவில்லையா..?

      நன்றி சகோ

      Delete