Followers

Monday 28 July 2014

வாழலாம் இருப்பதில் நிறைந்து.








கண்ணும் கருத்தும் வேளையில் வைத்தேன்
காதை மட்டும் வாசலில் வைத்தேன்
வாசமாக சட்டியில் சமைத்து வைத்தேன்
வானம் பார்த்து வாசலில் குத்த வச்சேன்
நட்சத்திரம் எண்ணி தோற்றுப் போனேன்
நளமாய் வாழநீ வேளையில் மூழ்கிப்போனாய்
வயிறுவாடும் முன்னே வந்திடு விரைவாய்
வாழலாம் இருப்பதில் நிறைந்து.




படம் - கூகுள் உதவி நன்றி.

10 comments:

  1. இவளின் கணவர் துபாய்வாழ் குடிமகனா ? சகோதரி
    அருமையான ஏக்கத்தின் பிரதிபலிப்பு.

    ReplyDelete
    Replies
    1. கற்பனை சிறகு விரிந்து
      கவிதையாய் வந்ததே
      உலகெங்கில் இருந்தாலும்
      உள்ளது போதும் நலமே

      Delete
  2. தங்களின் கற்பனையென்பது தெரிந்ததே... நான் கேட்டது அவளின் நிலையிலிந்தது கவிதை அவ்வளவுதான்....
    எனது பதிவுகளை தொடர்வதற்க்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஓ...அப்படியா...
      சாதாரணமான பெண்னின் அன்பு நிலை.
      நன்றி.

      Delete
  3. ம்ம் நல்ல ஏக்கம் மிகுந்த காதல் கவி சகோதரி...ஆனா இப்பல்லாம் யாருங்க "வயிறுவாடும் முன்னே வந்திடு விரைவாய்" அப்படின்னு எல்லாம் இருக்காங்க...பசிச்சா காத்திருத்தல் இல்லை...சாப்பாடுதான்......

    ReplyDelete
    Replies
    1. "வயிறுவாடும் முன்னே வந்திடு விரைவாய்" அப்படின்னு எல்லாம் இருக்காங்க...பசிச்சா காத்திருத்தல் இல்லை...சாப்பாடுதான்.. " ஆமாம் இப்பவெல்லாம் அப்படித்தான்.

      அவன் வயிறு வாடுதல் கண்டு அன்பின் மிகுதியில் தலைவனுக்கு மனதில் சொல்கிறாள்.
      நன்றி.

      Delete
  4. எல்லா ஆண்மகனுக்கும் இம்மாதிரியான ஒரு மனைவி அமைந்துவிட்டால், எவ்வளவு நன்றாக இருக்கும்.

    கவிதைக்கேற்ற அழகான படம்.

    ReplyDelete
  5. தாங்கள் கொடுத்து வைத்தவர் தானே. இல்லையா..? அருமையான எங்கள் சகோதரி கிடைக்க.
    நன்றாகத்தான் இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  6. வணக்கம்

    இப்படி வரம் இறைவன் கொடுத்தவேண்டும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete