Followers

Wednesday 23 July 2014

இதம்,இதம்,இதம்

இதமனப்பூ  வின்நறு  நாற்றமதை
     இதமாய்பகிர  வெனவலைப்  பூமுதலடி  
இதம்தேடி  வருவோர்க்  கூட்டத்திரள்
     இதமாகிமனம்  மகிழ்நிறை  பறந்திடவே
இதம்தேடி  வந்திளைப்  பாரவேஞான்
     இதமாய்  சிறுமுயற்சி   விழைகிறேன்
இதத்தின்  வருடலில்  சுகமாய்நல்
     இதம்  செழித்துவளர  வாழ்த்துவீர்.      




8 comments:

  1. வணக்கம்

    அழகிய கவியை படிக்க தந்தமைக்கு வாழ்த்துக்கள்...
    பின்னூட்டம் இடும்போது சோதனைக் குறியீடு வருகிறது அதை இல்லாமல் செய்தால் வாசக உள்ளங்கள் கருத்துப் போடுவது இலகுவாக இருக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    முதல் வருகைக்கும்,
    முத்தான கருத்திற்கும்
    நன்றி சகோதரரே.
    கருத்துப் போடுவதை சரி செய்து விட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete

  3. வணக்கம்!

    இதம்எனும் சொல்லை இனிமையெனச் சொல்க
    மதுரத் தமிழில் மகிழ்ந்து!

    இதம் பிறமொழிச் சொல்

    இதம் = இனிமை, இன்பம், நன்மை, இசைவு

    நல்ல தமிழில் தலைப்பிட்டால் நான்மகிழ்வேன்
    வல்ல கவிஞன்என் வாழ்த்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்

      முதல் வருகைக்கும்,
      முத்தான கருத்திற்கும்
      நன்றி ஐயா.

      தலைப்பை மாற்றி விட்டேன் ஐயா....நன்றி.

      Delete
  4. இதம் எனும் சொல்லை வைத்தே இப்படி அழகான கவிதை! ஆனால் ஐயா அவர்கல் இதம் தமிழ் வார்த்தை அல்ல எங்கின்றாரே! புதிதுதான் எங்களுக்கும்1 அறிந்துகொண்டோம்!

    ReplyDelete
  5. வணக்கம்

    ஆம் .நானும் இப்போது தான் அறிந்தேன்.ஆகையால் தமிழ் பெயராக மாற்றி விட்டேன்.

    முதல் வருகைக்கும்,
    முத்தான கருத்திற்கும்

    நன்றி

    ReplyDelete
  6. “ இதம்சலிப் பெய்தநின்று ஏங்கினர் ஏங்கவும் “ என்பது திருவாசகம்.
    இதற்கு நன்மை என்று பொருளும் உண்டு.

    ReplyDelete