கூகுள் - நன்றி
உன்னை யாரென்று காட்டும்
உன் பேச்சு...
நிர்வாணமாய் நீ
நிற்பது உனக்கே தெரியாது...
மமதை மறைக்கும் உள் விழியை
மேதாவியாய் பேசிக் கொண்டிருப்பாய்...
எதிரில் நிற்போர் ஏமாளி என
எகத்தாளமிடுவாய்...
அழகாய் காய் நகர்த்துவாய்
அசந்திடும் நேரத்தில்...
ஆபத்து அவனுக்கு என
உனக்கே நீ குழிபறிக்கிறாய்...
உன் கையால் ஆகாத தனத்தினால்
கதறவைத்துக் கொண்டிருக்கிறாய் அடுத்தவரை...
உன்னை குத்திக் கிழித்த ரணங்களுக்கு
உன் சொற்களே காரணம் என நீயரிவாயா...?
வணக்கம் சகோ நலமா ? நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு....
ReplyDeleteமனப்பிம்பத்தை வெளிப்படுத்திய அழகிய கவிதை தொடர வாழ்த்துகள் - கில்லர்ஜி
வணக்கம் சகோ நலம்.
ReplyDelete//நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு.// ஆம் காலங்கள் ஓடி விட்டன..தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ