பருவம் மாறும் போது
புரிதலும் மாறுகிறது
தலைமுறை இடைவெளி
தொடர்முறை இடைவெளியாய்
செப்பும் மொழி சேர்வதில்லை
செவியிலோ ஏறுவதில்லை
அனுபவம் மாறுகையிலே
அம்மா சொன்னாளே என
பிள்ளையின் முன் பெற்றோர் நினைவு
பிள்ளைகளும் நினைக்கும் நாளை
இது ஒரு தொடர் வண்டி
ஏற்றமும் இறக்கமும் இருக்கும் தானே?
பருவம் மாறும் போது
புரிதலும் மாறுகிறது
வாழ்வின் அடிப்படை தத்துவமே இதுதான் சகோதரி கவிதையின் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்வின் தத்துவமே
Deleteவந்தது கவிதையாக
வாழ்க்கை போகுது
வாழையடி வாழையாக...
மூன்றாவது வரியில் "தலைமுறை" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எழுத்துப்பிழையை சரிபார்க்கவும் சகோதரி.
ReplyDeleteபருவ மாற்றத்தை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.
"//பிள்ளையின் முன் பெற்றோர் நினைவு
பிள்ளைகளும் நினைக்கும் நாளை//"
- உண்மை உண்மை
வாழ்த்துக்கள்.
ஆம், தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி சகோதரரே. சரி செய்து விட்டேன்.
Deleteவிடலைப் பருவம்
விடுவதில்லை கேட்க
விதி அது போலும்
ReplyDeleteவணக்கம்!
மயிலறகு பெயர்கண்டு மகிழ்ச்சி கொண்டேன்!
மதுகுடித்த வண்டாக மயங்கி நின்றேன்!
உயிருறவு தமிழன்றோ? பற்றை ஏந்தி
உவக்கின்ற பெயரிட்டாய்! கவிஞர் உற்ற
குயிலுறவு தானேற்றுக் கவிதை பாடு!
குளிர்தென்றல் நலமாக இன்பம் சூடு!
தயிருறவு கொண்டுள்ள பொருட்கள் யாவும்
தமிழுறவில் தருகின்ற துளசி வாழ்க!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
'இதம்' தவறை சுட்டிக்காட்டினீர்
Deleteஇன்முகமாய் விளக்கி விட்டீர்
இதயம் தமிழாய் உருக
மயிலிறகு எனபெயர் சூட்டினேன்
மனமுவந்து வலைக்கு நான்.
நன்றி ஐயா.
ReplyDeleteவணக்கம்!
உருவம் ஒளிரும் பருவக் கவிதை!
உருகும் உயிரும் உருண்டு!
உருண்டு காலம் கடந்து விழிக்கும்
Deleteஉயிர் மக்கள் மனம்
படைப்பு - சிறப்பாக உள்ளது நண்பரே!
ReplyDeleteதொடருங்கள் !
தொடர்கிறேன்!
நன்றி!
நன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteசிறப்பான கவிதை கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் அவர்களே.
Deleteசகோதரி எங்கே போயிற்று நாங்கள் இட்ட பின்னூட்டம்? இங்கு ப்ளாகரில் ஏதேனும் மாயப் பூச்சாண்டி உள்ளானோ?
ReplyDeleteஅருமையான படைப்பு சகோதரி!
இந்த ஜெனரேஷன் காப் இருந்து கொண்டேதான் இருக்குமோ? இப்போதெல்லாம் குறைந்து வருவது போலத் தோன்றுகின்றது.....இப்போதெல்லாம் பெற்றோர்களும் பிள்ளைகளும் நண்பர்களாய் பழகுகின்றார்களே!
ஐயா ..கருத்து பதிவு வரவில்லை ஐயா.
Deleteஜெனரேஷன் காப் இருந்து கொண்டே தான் இருக்கும். அது ஒரு விதி போல
நண்பர்களாக இருந்தாலும்....சில விஷயங்களில்....தலைமுறை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.
நன்றி ஐயா..